Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கட்டுப்பாட்டை இழந்து விபத்து, மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து விபத்து, மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழப்பு

Share:

குழுவாங், ஏப்ரல் 15-

ஜொகூர், குழுவாங்-ங்கில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து புரோட்டான் வீரா காரை மோதி விபத்துக்குள்ளானதில்அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று ஜாலான் பத்து பஹாத்-மெர்சிங் சாலையின் 103ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து மாலை மணி 3.15 அளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக, குழுவாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டெப்புடி சுப்பரின்டெண்டென் நிக் மோஹட் அஸ்மி ஹுசின் தெரிவித்தார்.

மெர்சிங் -ங்கிலிருந்து குழுவாங்-ங்கை நோக்கி பயணித்த கவாஸாகி EX250 ரக மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த புரோட்டான் வீரா காரை மோதி விபத்துக்குள்ளாகியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக நிக் மோஹட் கூறினார்.

இக்கோர விபத்தில் கடும் காயங்களுக்கு ஆளான மோட்டார்சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில், புரோட்டான் வீரா-வில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், காயங்கள் ஏதுமின்றி உயிர்தப்பினர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்