Mar 17, 2026
Thisaigal NewsYouTube
நீரில் மூழ்கிய தாயும் குழந்தையும் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

நீரில் மூழ்கிய தாயும் குழந்தையும் மீட்கப்பட்டனர்

Share:

தவாவ்,பிப்.7
தவாவ், கம்போங் நசிப் கித்தாவில் வீட்டின் அருகிலிருந்த ஆற்றில் தாயும் குழந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

40 வயதுடைய அப்பெண் உட்பட 7 வயதுடைய சிறுவன் ஆகியோர் சுயநினைவின்றி அக்கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தைக் குறித்து நேற்று பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரை அடுத்து அவ்விடத்திற்கு சென்றதுடன் சவப்பரிசோதனைக்காக அவ்விருவர்களின் உடல் தவாவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜஸ்மின் ஹுசின் கூறினார்.

சவப்பரிசோதனை அறிக்கையின் முடிவுகளுக்கு பிறகுதான் இது கொலையா அல்லது திடீர் மரணமா என்று கூற முடிவதாக ஜஸ்மின் ஹுசின் நேற்று இரவு ஓர் ஊடகத்தில் அறிவித்தார்.

இதுக்குறித்து 25 வினாடிகள் மற்றும் 37 வினாடிகள் கொண்ட இரண்டு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News