Dec 3, 2025
Thisaigal NewsYouTube
டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்
தற்போதைய செய்திகள்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.03-

மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐத் தேடும் பணிகளை, இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட Ocean Infinity என்ற நிறுவனம் கையில் எடுத்திருப்பதாக போக்குவரத்து அமைச்சு இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

இதனையடுத்து வரும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல், மீண்டும் தேடும் பணிகள் துவங்கப்படவுள்ளன.

மொத்தம் 55 நாட்களுக்கு இடைவிடாத ஆழ்கடல் தேடுதல் நடவடிக்கையை Ocean Infinity நிறுவனமானது மேற்கொள்ளவுள்ளது.

இவ்வாண்டு மார்ச் 25-ஆம் தேதி, Ocean Infinity நிறுவனத்துடன் மலேசிய அரசாங்கம் செய்து கொண்ட சேவை ஒப்பந்தத்தின் படி, விமானத்தைக் கண்டுபிடிக்க அதிக சாத்தியம் உள்ளதாகவும் மதிப்பிடப்பட்ட பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News