Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்களை போலீசார் தேடுகின்றனர்
தற்போதைய செய்திகள்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்களை போலீசார் தேடுகின்றனர்

Share:

ஜெத்தி மாதாங் பெலன்டோக், சுங்கை கிந்தா வில் கொலை செய்யப்பட்டிருப்பதாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை குறித்து போலீசார் அப்பெண்ணின் உறவினர்களை தேடி வருகின்றனர்.

கடந்த ஜனவரி 24 ஆம் தேதி 10:30 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்பினை தொடர்ந்து அப்பெண்ணின் உடல் அடையாளம் காண முடியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக Perak Tengah மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபீசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்தார்.

30க்கும் 40க்கும் உட்பட்ட வயதுடைய அப்பெண் 135 சென்டிமீட்டர் உயரத்திலும், இடது கண்ணிமையில் ஒரு மரு என்று சில அடையாளங்களை Hafezul Helmi வெளியிட்டார்.

இதுக்குறித்து விவரம் அல்லது அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து ஏதெனும் தகவல் தெரிந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு ஹஃபீசுல் ஹெல்மி ஹம்சா பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

Related News