Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஸ்கேமரிலிருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஸ்கேமரிலிருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள வேண்டும்

Share:

வளர்ச்சியடைந்த ஒரு நாடாக மலேசிய முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சினால் மக்களை சுலபமாக ஏமாற்றும் கும்பல்கள் புற்றீசலைப் போல ஸ்கேம் வடிவில் ஆங்காங்கே உருவெடுள்ளதாக கூலிம் மாவட்ட தகவல் இலாகாவின் அதிகாரி ஜூலியானா இப்ராஹிம் தெரிவித்தார் .

நாட்டின் 60 ஆவது மலேசிய தினத்தை முன்னிட்டு கூலிம் தாமான் செலாசிக் குடியிருப்புப் பகுதியிலுள்ள கோமுனுத்தி ருக்கூன் தெதாங்கா தாமான் செலாசிக் சோன் 1 ஏற்பாட்டில் கூலிம் மாவட்ட ஒற்றுமைத்துறையும் , தகவல் இலாகாவும் இணைந்து நடத்திய சிறுவர்களுக்கான போட்டி விளையாட்டு நிகழ்வில் ஜூலியானா இதனை வலியுறுத்தினார்.

தாமான் செலாசிக் ஒருமைப்பாட்டு பாலர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை கூலிம் மாவட்ட ஒருமைப்பாட்டு இலாகாவின் அதிகாரி அரிஸ்யவாதி அலாவ்டின் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

தங்களின் சொத்துடைமையை மக்கள், எப்பொழுதும் விழிப்புடன் பாதுக்காத்து வர வேண்டிய அவசியத்தையும் அவர் தமது உரையில் ஜூலியானா வலியுறுத்தினார்.

பணி ஓய்வு பெற்ற 60 வயதிற்கும் மேற்பட்டவர்களை இலக்காக கொண்டு நடந்து வரும் ஸ்கேம் மோசடிகளில் மக்கள் அனைவரும் அதிக அளவில் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இது போன்ற ஓன்லைன் மோசடிகளில் சிக்குவதை தவிர்க்க முடியும் என்று ஜூலியானா கேட்டுக்கொண்டார்.

200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கோமுனுத்தி ருக்கூன் தெதாங்கா தாமான் செலாசிக் சிறுவர்களுக்காக தேசிய கருப்பொருளில் ஆடை அலங்காரம் , மிதிவண்டி அலங்காரம் , தேசிய சின்ன வடிவமைப்பு என பல போட்டிகள் நடத்தப்பட்டு, சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related News