May 22, 2026
Thisaigal NewsYouTube
இருவரின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்பபட்டன
தற்போதைய செய்திகள்

இருவரின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்பபட்டன

Share:

கடந்த செவ்வாய்க்கிழமை, காப்பார், 12 ஆவது மைல், கம்போங் தோக் மூடாவில் இலகு ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிரிழந்த விமானி மற்றும் துணை விமானி ஆகியோரின் நல்லடக்கச் சடங்கு இன்று நடைபெற்றது.

இந்த விமான விபத்தில் உயிரிழந்த 30 வயதுடைய விமானி டேனியல் யீ யின் உடல், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு Shah Alam Memorial Park –க்கில் நல்லடக்க செய்யப்பட்டது.

இதேபோன்று 43 வயதுடைய துணை விமானி ரொஷான் சிங் ரைனா நல்லுடல், இன்று பிற்பகல் 12.40 மணியளவில் குடும்ப உறுப்பினர்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு ஜோகூர்பாரு, Sunway Bukit Lenang – கில் உள்ள அவரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு ஜோகூர்பாரு, மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது.

Related News