Sep 28, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்

Share:

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரித்து வருவதாக அம்மாநில போலீஸ் தலைவர் சுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு, ஜனவரி 1-ஆம் தேதி முதல் இதுவரை 538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவ்வழக்குகளில், மொத்தம் 8.59 மில்லியன் ரிங்கிட் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அவற்றில் இணைய வர்த்தக மோசடிகளில் 212 வழக்குகள் பதிவாகி, 1.65 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில், இணைய முதலீட்டு மோசடிகளில் 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3.55 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுல்கைரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போலி வங்கிக் கடன், வேலைவாய்ப்பு, தொலைப்பேசி மோசடி குறிப்பாக காதல் மோசடி உள்ளிட்ட மோசடிகளிலும் 3 மில்லியனுக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இணைய பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்