Dec 4, 2025
Thisaigal NewsYouTube
விமானக்கட்டண நிர்ணயிப்பில் அரசாங்கம் தலையிட்டதில்லை
தற்போதைய செய்திகள்

விமானக்கட்டண நிர்ணயிப்பில் அரசாங்கம் தலையிட்டதில்லை

Share:

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானக் கட்டணங்களை நிர்ணயிப்பதில் அரசாங்கம் தலையிட்டது கிடையாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் விளக்கம் அளித்துள்ளார்.

விமானக் கட்டண நிர்ணயிப்பில் அந்த தேசிய விமான நிறுவனம் பல்வேறு விவகாரங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதால் கட்டணங்களை நிர்ணயிப்பதில் போக்குவரத்து அமைச்சு தனது கருத்தை வலிந்து திணித்தது கிடையாது என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தியுள்ளார்.
மலேசிய ஏர்லைன்சின் விமானங்களில் விநியோகிக்கப்படும் உணவு முறையை சிக்கன கட்டண விமான நிறுவனத்தின் விமானங்களில் வழங்கப்படும் உணவுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.

Related News