ஷா அலாம்,பிப்.1
ஷா அலாம் மருத்துவமனையின் பின்புறப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சுயநினைவின்றி ஐந்து வயதுடைய சிறுமி உயிரிழந்து காணப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 8:01 மணியளவில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிடமிருந்து கிடைக்கபெற்ற புகாரை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் அதிகாரி ஏசிபி முஹமாட் இக்பால் இப்ராஹிம்தெரிவித்தார்.
பிற்பகல் 2 மணியளவில் அச்சிறுமியை அவரின் தாயார் குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் தற்செயலாக பெரோடுவா அக்சியா வாகனத்திலேயே விட்டுச் சென்றதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
அச்சிறுமி கார் enjin அணைக்கப்பட்ட வேளையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். மருத்துவமனை பணியாளரான 35 வயதுடைய அக்குழந்தையின் தாயாரை மாலை 6 மணியளவில் அவரின் கணவர் தொடர்பு கொண்ட பிறகுதான் இச்சம்பவம் குறித்து தெரியவந்ததுள்ளது.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளி அல்லது குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து அழைத்து செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருக்கும்படி முஹமாட் இக்பால் அறிவுறுத்தினார்.








