Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சிறார்கள் காரின் கூரை மீது தலைக்காட்டியது, விசாரணை
தற்போதைய செய்திகள்

சிறார்கள் காரின் கூரை மீது தலைக்காட்டியது, விசாரணை

Share:

கார் கூரையின் Sunroof பகுதி திறக்கப்பட்டு, இரண்டு சிறார்கள் தலையை வெளியே காட்டியவாறு மேற்கொள்ளப்பட்ட வாகனப் பயணம் தொடர்பில் காரின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாணை செய்ய தொடங்கியுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட காரோட்டியின் இச்செயல், அந்த இரண்டு சிறார்களின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படுத்தக்கூடியதாகும்.

தவிர, அந்த கார், சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிற்காமல் சென்றுள்ளதாக . என்று ஏசிபி வான் அஸ்லான் குறிப்பிட்டார்.

இச்சம்பவம், நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.12 மணியளவில் Putra Heights, Persiaran Putra Perdana சாலையில் நிகழ்ந்ததாக அவர் மேலும் கூறினார்.

Related News