கோலாலம்பூர், வங்சா மஜூ வில் மாது ஒருவர், கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கும்பல் ஒன்றினால் பாலியல் பலாத்காரம் புரியப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிரமாக தேடப்பட்டு வந்த அந்த மாதுவின் மைத்துனன், கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அந்த மாதுவின் வீட்டில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பிடிபட்டுள்ள அந்த நபரை குற்றவியல் சட்டம் 375 பிரிவின் கீழ் விசாரணை செய்வதற்கு ஏதுவாக 6 நாட்களுக்கு தடுத்துவைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் மகளிர் பாலியல் தொல்லை விசாரணைப் பிரிவின் துணை தலைமை இயக்குநர் ஏசிபி சித்தி கம்சியா ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்த வக்கிர செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஐவரில் ஒருவர் பிடிபட்ட நிலையில் மேலும் நால்வரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








