May 22, 2026
Thisaigal NewsYouTube
சம்பவ இடத்திற்கு செல்வதற்கு தீயணைப்பு வீரர்களுக்கு 6 மணி நேரம் பயணம்
தற்போதைய செய்திகள்

சம்பவ இடத்திற்கு செல்வதற்கு தீயணைப்பு வீரர்களுக்கு 6 மணி நேரம் பயணம்

Share:

சரவாக், மே 29-

சரவாக், பாரம், கம்போங் லாங் பாங்கன் அபோ -வில் 14 குடும்பங்களை சேர்ந்த 46 குடியிருப்பாளர்களின் நீண்ட வீடு ஒன்று தீயில் அழிந்து பொருட்கள் அனைத்தும் சேதமுற்றன.

நேற்று அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் சுமார் 248 கிலோமீட்டர் தொலைத்தூரத்திலிருக்கும் பாதிக்கப்பட்ட வீட்டை வந்தடைய அவர்களுக்கு 6 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக மருடி தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் மவ்ரீன் சிம் அஹ் லியான் தெரிவித்தார்.

சம்பவ இடத்தை விரைந்த வேளை, 14 குடும்பங்களை சேர்ந்த அந்த வீடு முற்றிலும் அழிந்து நாசமாகியதுடன் டொயோட்டா ஹைலக்ஸ் உட்பட ஹோண்டா வெப் ஆகிய வாகனங்கள் தீ விபத்தில் பாதிக்கப்பட்டிருந்ததாக மவ்ரீன் கூறினார்.

அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள் எவரும் காயமின்றி உயிர் தப்பியதாகவும் இச்சம்பவம் ஏற்பட்ட காரணம் குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருவதாக மவ்ரீன் விவரித்தார்.

Related News