Dec 3, 2025
Thisaigal NewsYouTube
3 துறைகளில் பணியாற்றுவதற்கு 7,500 அந்நிய தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அங்கீகாரம்  அமைச்சர் சிவக்குமார் தகவல்
தற்போதைய செய்திகள்

3 துறைகளில் பணியாற்றுவதற்கு 7,500 அந்நிய தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அங்கீகாரம் அமைச்சர் சிவக்குமார் தகவல்

Share:

இந்தியர்கள் சார்ந்த ஜவுளி, நகைக்கடை மற்றும் சிகை அலங்காரம் ஆகிய தொழில்த்துறைகளில் வேலை செய்வதற்கு 7,500 அந்நிய தொழிலாளர்களை எடுப்பதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கிருப்பதாக மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்கு கடந்த 14 ஆண்டு காலமாக முடக்கப்பட்டிருந்த இந்த 3 தொழில்துறைகளிலும் மீண்டும் அந்நியத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது மூலம் அத்துறைகளில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையை முழுமையாக தீர்க்கப்படும் என்ற நிலை இல்லாவிட்டாலும் அதன் நடப்புத் தேவைகளை பூர்த்தி செய்ய வல்லதாக இருக்கும் என்று அமைச்சர் சிவக்குமார் விளக்கினார்.

தவிர, இந்த 3 துறைகளிலும் சட்டவிரோத தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் நடைமுறையையும் இத்திட்டம் தடுத்து நிறுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சு மற்றும் உள்நாட்டு வாணிபம், வாழ்க்கை செலவின அமைச்சு ஆகியவற்றுடன் கூட்டாக இணைந்து இத்திட்டத்தை எவ்வாறு அமல்படுத்துவது என்பதற்கான ஒரு பொருத்தமான செயல்முறையை தமது மனிதவள அமைச்சு வகுக்கும் என்று சிவக்குமார் தெரிவித்தார்.

Related News