May 22, 2026
Thisaigal NewsYouTube
குடியானவர் மீது பாலியல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

குடியானவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Share:

தனது அண்டை வீட்டுக்காரரின் 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குடியானவர் ஒருவர் பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

நீதிபதி சுல்ஹஸ்மி அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, 28 வயதுடைய அந்த குடியானவர் தனக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

பினாங்கு, கெபாலா பாத்தாஸ், லாஹாட் தியாங் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த மே 3 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அந்த நபர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376 பிரிவின் கீழ் அந்த குடியானவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News