பாஸ் கட்சியினால் நடத்தப்பட்டு வரும் ஹாராகா பத்திரிகையின் நிருபர்களுக்கான தகவல் இலாகாவின் அடையாள அட்டைகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
தகவல் இலாகாவின் இந்த நடவடிக்கையை பாஸ் கட்சியைச் சேர்ந்த பாசிர் மாஸ் எம்.பி. அஹ்மாட் ஃபட்லி ஷாரி உறுதிபடுத்தியுள்ளார்.
பாஸ் கட்சியினால் நடத்தப்பட்டு வரும் ஹாராகா பத்திரிகை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகைப்படத்துடன் இஸ்ரேல் கொடியை தொடர்புப் படுத்தி செய்தி வெளியிட்டு இருந்தது குறித்து பிரதமர் இன்று கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய பத்திரிகையின் நிருபர்களுக்கான அட்டைகள் பறிக்கப்பட்டுள்ளன.
துன் மகாதீர் பிரதமராக இருந்த காலத்தில்கூட ஹாராகா பத்திரிகையின் நிருபர்கள் அடையாள அட்டை பறிக்கப்பட்டது இல்லை என்று அஹ்மாட் ஃபட்லி குறிப்பிட்டார்.







