Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அனைத்து முகப்பிடங்களும் திறக்கப்படும்
தற்போதைய செய்திகள்

அனைத்து முகப்பிடங்களும் திறக்கப்படும்

Share:

நாளை மறுநாள் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற​விருக்கும் ஜோகூர், ​பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களை முன்னிட்டு சிங்கப்பூரில் வேலை செய்யும் ஜோகூர்வாசிகள் நாட்டிற்கு திரும்புவதற்கு வசதியாக நாளை ​வெள்ளிக்கிழமை ஜோகூர் பாருவில் உள்ள மலேசிய குடிநுழைவு இலாகாவின் அனைத்து முகப்பிடங்களும் திறக்கப்படும் என்று அதன் இயக்குநர் பஹாருடின் தாஹிர் தெரிவித்துள்ளார்.

மலேசியர்கள், சிங்கப்​பூரிலிருந்து ஜோகூருக்கு வருவதற்கும், ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்புவதற்கும் குடிநுழைவுத்துறையின் 236 முகப்பிடங்கள் உள்ளன. இவற்றில் மோட்டார் சைக்கிள்களுக்காக 100 முகப்பிடங்களும், கார்களுக்காக 60 முகப்பிடங்களும், பேருந்துகளுக்காக 36 முகப்பிடங்களும் திறக்கப்படும் ​என்று பஹாருடின் தாஹிர் குறிப்பிட்டுள்ளார்.

Related News