May 22, 2026
Thisaigal NewsYouTube
துன் டைம் ஜைனுதீன், அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவுக்கு, சட்டத்துறை தலைவர் எதிர்ப்பு தெரிவிப்பார்!
தற்போதைய செய்திகள்

துன் டைம் ஜைனுதீன், அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவுக்கு, சட்டத்துறை தலைவர் எதிர்ப்பு தெரிவிப்பார்!

Share:

கோலாலம்பூர், ஜூன் 12-

முடக்கம் செய்யப்பட்டுள்ள தங்களது பொருளக கணக்குகளை திரும்ப ஒப்படைக்க்கோரி, நிதி முன்னாள் அமைச்சர் துன் டைம் ஜைனுதீன்-னும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுக்கு, சட்டத்துறை தலைவர் எதிர்ப்பு தெரிவிப்பார் என கோலாலம்பூர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தேசிய சட்டத்துறையைச் சேர்ந்த கூட்டரசு மூத்த வழக்கறிஞர் ஷம்சுல் போல்ஹாசன், இன்று நீதிபதி டத்தோ வான் அஹ்மத் ஃபரித் வான் சலே முன்னிலையில் அதனை தெரிவித்தார்.

அதனையடுத்து, துன் டைம் ஜைனுதீன்-னும் அவரது குடும்ப உறுப்பினர்களும் செய்துள்ள சீராய்வு மனுவை விசாரிப்பதற்கு ஆகஸ்ட் 8ஆம் தேதியை நீதிபதி நிர்ணயம் செய்தார்.

ஒருவேளை, அவர்களது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் வாய்வழி வாதங்களை கேட்டறிய வெவ்வேறான தேதிகளை நீதிமன்றம் நிர்ணயம் செய்யும்.

தங்களது பொருளக கணக்குகளை திரும்பப்பெறும் முயற்சியில்,
இம்மாதம் 6ஆம் தேதி டைம் ஜைனுதீன், அவரது மனைவி, நான்கு பிள்ளைகள், 18 நிறுவனங்கள் என மொத்தம் 24 பேர், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-முக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும் எதிராக அம்மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

Related News