ஷா ஆலாம், நவம்பர்.20-
கடந்த செவ்வாய்க்கிழமை பத்துகேவ்ஸ் அருகில் எம்ஆர்ஆர்2 சாலையில் இசிஆர்எல் ரயில் இருப்புப்பாதை நிர்மாணிக்கும் கட்டுமானத் தளத்தில் இரும்பு சாரக்கட்டு இடிந்து கார் மீது விழுந்த சம்பவம் தொடர்பில் CIDB எனப்படும் மலேசிய கட்டுமானத் தொழில்துறை மேம்பாட்டு வாரியம் இன்று விசாரணையைத் தொடக்கியது.
இச்சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஒரு பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய போதிலும், கட்டுமானத்தளத்தில் குறிப்பாக சாலையின் மேல்தளத்தில் இரும்பு சாரக்கட்டு இடிந்து விழுந்ததற்கான காரணத்தை ஆராய்வதற்கு அதன் அதிகாரிகள் விசாரணையை தொடக்கியிருப்பதாக பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
விசாரணை முடிவும் வரையில் எம்ஆர்ஆர்2 சாலையின் மேல்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








