Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்

மலேசியாவின் ஸ்குவாஷ் நம்பிக்கை நட்சத்திரமான Ng Eain Yow, 2024ஆம் ஆண்டு மலேசியா தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதன் இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் எகிப்திய வீரரை எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த வெற்றியைப் பற்றி பேசிய Ng Eain Yow, தனது வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த வெற்றி என்று கூறியுள்ளார். மேலும், இந்த வெற்றிக்கு கடினமாக உழைத்ததும், ஒவ்வொரு புள்ளியையும் கவனமாக விளையாடியதும் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

பெண்கள் பிரிவில் எகிப்திய வீராங்கனை Amina Orfi வெற்றி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் மலேசிய வீராங்கனை Sivasangari யை எதிர்த்து விளையாடி சவாலான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →