கோலாலம்பூர், அக்டோபர்.02-
மனிதநேய உதவிகளுடன் காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த “Global Sumud Flotilla” கப்பல்களில் இருந்த 8 மலேசியர்கள் இஸ்ரேல் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 5 மலேசியர்களின் நிலை பற்றி முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
அதே வேளையில், மொத்தமுள்ள 40 கப்பல்களில், 9 கப்பல்கள், இஸ்ரேல் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளன என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், அக்கப்பல்களில் உள்ள மனித நேய ஆர்வலர்கள் நேரலையாக அங்கு நடப்பது குறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர்.
என்றாலும், இதுவரையில் யாரும் காயமடையவில்லை என்றும், இஸ்ரேலியப் படைகள் சுற்றி வளைத்தாலும் கூட, தங்களது நோக்கத்தில் உறுதியாக இருப்பதாகவும் மனித நேய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.








