Mar 16, 2026
Thisaigal NewsYouTube
2 மணி நேரத்தில் 20 டன் அரிசி விற்றுத் தீர்ந்தது
தற்போதைய செய்திகள்

2 மணி நேரத்தில் 20 டன் அரிசி விற்றுத் தீர்ந்தது

Share:

ஈப்போ, தாமான் கிளேபாங் பாடாங் ஆவாமில் ஏற்பாடு செய்யப்பட்ட மடானி மலிவு விற்பனையின்போது 20 டன் அரிசி 2 மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்தது.

மேலும், கனவாய். இறால், மீன் ஆகியவை, வழக்கமான சந்தை விலையைக் காட்டிலும் மலிவாக விற்கப்பட்டன.

இங்கு விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்க, மக்கள் கூட்டம் காலை 8.30 மணிக்கு முன்னரே வரிசையில் நின்றனர். உணவு தயாரிக்கும் வியாபாரிகள் உட்பட இங்கு வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.

அடானி விற்பனை மூலம் பொருட்களை வாங்குவதால், 20 வெள்ளி முதல் 30 வெள்ளி வரை சிக்கனம் செய்ய முடிகிறது என வந்தவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த விற்பனைத் திட்டத்தை மேற்பார்வையிட பிரதமர் அன்வார் இப்ராகிம் நேரில் வந்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் வியாபாரிகளுடனும் மக்களுடனும் செலவு செய்தார்.

அதே சமயம், அங்கு வந்தவர்களுக்கு ரஹ்மா உணவுத் திட்டம் 5.00 வெள்ளிக்கு விற்கப்பட்டது.

Related News