Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

Share:

ஜொகூர் பாருவில் உள்ள சவுத்கீ பகுதியில் ஆடவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் ஹூ சுவான் ஹுவாட் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

30 வயதுடைய வெளிநாட்டு நபர் ஒருவர் நேற்று காலை சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கைது நடவடிக்கையானது மலேசியா மற்றும் சிங்கப்பூர் அதிகாரிகளின் நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஹூ சுவான் ஹுவாட் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் சனிக்கிழமை, சவுத்கீ பகுதியில் 32 வயதான ஆடவர், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News