Oct 10, 2026
Thisaigal NewsYouTube

முகைதீனின் வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற அனுமதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முகைதீனின் வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற அனுமதி

கோலாலம்பூர், ஜூன்.16-

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஜானா விபாவா திட்டத்தின் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்புடைய நம்பிக்கை மோசடி வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு இன்று நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த உத்தரவைப் பிறப்பித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஜமில் ஹுசேன், இவ்வழக்கில் 3 சட்டப் பிரச்னைகள் எழக்கூடும் என்பதால் இதனை உயர் நீதிமன்றம் விசாரணை செய்வதே முறையாகும் என்று குறிப்பிட்டார்.

இந்த மூன்று சட்டச் சிக்கல்களும் சாதாரணமானவை என்று நாம் முடிவு செய்து விட முடியாது. இதனைத் தீர்க்கும் வல்லமை உயர் நீதிமன்றத்திற்கு உள்ளது என்று ஜமில் ஹுசேன் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முகைதீனின் வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற அனுமதி | Thisaigal News