Jul 27, 2026
Thisaigal NewsYouTube
விவாகரத்து கேட்ட மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
தற்போதைய செய்திகள்

விவாகரத்து கேட்ட மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்

Share:

டுங்குன், ஏப்ரல் 09-

டுங்குன், கெத்தெங்காஹ் ஜெயா-வில் விவாகரத்து கேட்டதற்காக தனது மனைவியை, தொழிலாளி ஒருவர் அரிவாளால் கொடூரமாக வெட்டி காயப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் உள்ளூர்வாசியான 64 வயதுடைய கணவருக்கும் 39 வயதுடைய மனைவிற்கும் இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக தகராறு ஏற்பட்டதாக டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் மைஸுரா அப்துல் காதிர் கூறினார்.

அச்சண்டையில் அந்நபர் விவாகரத்து கேட்ட தனது மனைவியை கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி தலையை வெட்டியதாக மைஸுரா அப்துல் இன்று தெளிவுப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட அப்பெண் மேல் சிகிச்சைக்காக சுல்தானாஹ் நூர் சாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டப்பட்ட அந்நபர் கைது செய்யப்பட்டு, குற்றவியல் சட்டம் 326 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Maizura Abdul மேலும் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்