நாளை திங்கட்கிழமை, Haji பெருநாள் மற்றும் பொது விடுமுறையை முன்னிட்டு, பயணிகள் அனைவரும் தங்களின் வீட்டிற்கு திரும்பி கொண்டிருப்பதை தொடர்ந்து, பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து இன்னும் சீராக இருப்பதாக தெரியவந்துள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலை மற்றும் Kuala Lumpur - Karak நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மற்ற நாட்களை காட்டிலும் தற்போது வாகனங்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், வாகனங்கள் இன்னும் கட்டுப்பாட்டில் காணப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
Senawang - கிலிருந்து Pedas Linggi - வரையில் தெற்கை நோக்கி செல்லும் 251.6 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.ஆக, நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பயனர்கள் அதீத கவனத்துடனும் பாதுகாப்பாகவும் தங்களின் பயணத்தை மேற்கொள்ளும்படி வலியுறுத்தப்படுகிறது.








