பராமரிப்பு மையங்கள் அல்லது இதர இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் தங்கள் பிள்ளைகளுக்கு எதிராக இழைக்கப்படும் வக்கிர செயல்கள் குறித்து பெற்றோர்கள் புகார் செய்யத் தயங்கக் கூடாது என்று மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நன்சி சுக்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு புகார் செய்வது மூலம் தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட காமுகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பெருந்துணையாக இருக்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.
சிறார்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பில் கடந்த 2020ஆம் ஆண்டு 375 சம்பவங்களாக பதிவான புகார்கள், 2021 ஆம் ஆண்டில் 506 ஆக அதிகரித்து இருப்பதையும் நன்சி சுக்ரி சுட்டிக் காட்டினார்.








