Dec 3, 2025
Thisaigal NewsYouTube
யாருடைய உத்தரவு, முகைதீன் கேள்வி
தற்போதைய செய்திகள்

யாருடைய உத்தரவு, முகைதீன் கேள்வி

Share:

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் விடுதலை செய்யப்பட்டதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டார்.

ஜாஹிட்டிற்கு எதிரான 47 குற்றச்சாட்டுகளை அகற்றுவதற்கு பிராசிகியூஷன் தரப்பு செய்து கொண்ட விண்ணப்பமானது எந்த வகையிலும் நியாயமில்லை என்று முகைதீன் குறிப்பிட்டார்.

காரணம், ஜாஹிட்டிற்கு எதிரான அந்த 47 குற்றச்சாட்டுகளில் அடிப்படை இருப்பதாதகவும், அவற்றுக்கு முகாந்திரங்கள் இருப்பதாகவும் இதற்கு முன்பு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்த குற்றச்சாட்டகள் திடீரென்று எவ்வாறு அகற்ற முடியும் என்று முன்னாள் பிரதமருமான முகைதின் கேள்வி எழுப்பினார்.

Related News