Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாம் நாள் வெற்றிநடை போடும் பாதயாத்திரை
தற்போதைய செய்திகள்

இரண்டாம் நாள் வெற்றிநடை போடும் பாதயாத்திரை

Share:

மாரான், மார்ச் 22.

மாரான், ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 93 ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை பத்துமலை திருத்தலத்திலிருந்து பகாங், மாரானை நோக்கி தொடங்கிய பாதயாத்திரை பயணம் இன்று வெள்ளிக்கிழமை, இரண்டாம் நாளாக வெற்றிநடை போட்டு வருகிறது.

காலை உணவிற்கு பிறகு பங்கேற்பாளர்கள் காராக், முருகன் கோவிலிலிருந்து அதிகாலை 4 மணியளவில் கம்போங் அவாஹ் - வை நோக்கி சுமார் 54 கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.

இப்புனித பயணம் லன்ச்சாங் - கில் நிறுத்தப்பட்டு ஜம்பு ரியாஸ் பகுதியை சேர்ந்த ‘Lanchang boys’ உறுப்பினர்கள் பங்கேற்பாளர்களுக்கு இலவசமாக கூடுதல் உணவுகளை வழங்கி அவர்களின் ஆதரவை தெரிவித்தனர்.

‘Lanchang boys’ -யின் சேவை மனப்பான்மையை நினைவுக்கூறும் வகையில் மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத்தலைவரும், உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் மூடா கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் R. சிவபிரகாஷ் நினைவு பரிசுகளை அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.

பிறகு, பங்கேற்பாளர்களின் விருப்பதிற்கு ஏற்றவாறு இஞ்சி தேநீர் வழங்கப்பட்டதுடன் வழியில் ஒரு தாயார் இலவசமாக உணவுகளை கொடுத்து அவரின் சேவையை வெளிப்படுத்தினார்.

கிழக்கை நோக்கி ஓர் ஆன்மீக சிந்தனையுடன் செல்கின்ற இந்த பாதயாத்திரை பயணத்தில் பொதுமக்கள் வழங்குகின்ற சேவை பாராட்டுக்குரியது என்று டாக்டர் சிவபிரகாஷ் கூறினார்.

இப்பாதயாத்திரை பங்கேற்பாளர்களின் குடும்ப உணர்வோடும் சிரிப்புடனும் நிரம்பிய ஒரு பயணமாக அமைகிறது. நாளை மறுநாள் ஆயிரக்கணக்கானோர் இப்புனித பாதயாத்திரை பயணத்தில் ஒன்றுக்கூடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்ப்பதாக டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்