தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அடுத்த 4 ஆண்டுகள் வரையில் தாக்குப்பிடிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடப்பு அரசாங்கம் போதுமான பெரும்பான்மையை கொண்டு இருப்பதால் அடுத்த பொதுத் தேர்தல் வரையில் நிலைத்தன்மையுடன் தொடர்ந்து வழிநடத்தப்படும் என்று பிரதமர் விளக்கினார்.
எதிர்க்கட்சியினரின் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் ஒற்றுமை அரசாங்கம், போதுமான வலிமையை கொண்டு இருப்பதால் அவர்களால் தீபகற்பத்தின் தென் மாநிலங்களை ஊடுரு முடியும் என்பது நிச்சயம் பகல் கனவாக மட்டுமே இருக்க முடியும் என்று பிரதமர் விளக்கினார்.
நாடாளுமன்றத்தில் தமது தலைமையிலான அரசாங்கத்திற்கு போதுமான எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதால் அடுத்த 4 ஆண்டுகள் வரையில் எவ்வித இடயூறின்றி அரசாங்கத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்ல முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு இன்று ஒரு நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அனவார், Asia Milken கழகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான உச்சநிலை மாநாட்டில் நடத்தப்பட்ட சிறப்பு சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

தற்போதைய செய்திகள்
ஒற்றுமை அரசாங்கம் அடுத்த 4 ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும் - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நம்பிக்கை
Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


