May 22, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்

Share:

கோலாலம்பூர் சிட்டி மற்றும் ஜோகூர் தாருல் தக்சிம் (JDT) ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையே நேற்று நிகழ்ந்த காற்பந்து போட்டியினை தொடர்ந்து, செராஸ், ஸ்தேடிய- மிற்கு வெளியே நடந்த கலவரத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இன்று மதியம் 2 மணியளவில் YouTube - பில் இச்சம்பவம் குறித்து 4 நிமிட 42 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்று தமது தரப்பின் கவனத்திற்கு வந்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் ரவீந்தர் சிங் சர்பன் தெரிவித்தார்.

அந்த காணொளியில் சம்பந்தப்பட்ட அணியின் இரசிகர்கள் கொண்ட குழு ஒன்று ஸ்தேடிய- மிலிருந்து வெளியேறி பொருட்களை வீசுவதுடன் பட்டாசுக்களை கொழுத்தி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருப்பது தெரிய வந்ததாக ரவீந்தர் சிங் கூறினார்.

இக்கலவரத்தில் நபர் ஒருவரின் கார் கண்ணாடி உடைந்திருப்பது குறித்து பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்திருப்பதாக அவர் அறிவித்தார்.

இதுக்கு‌றி‌த்து குற்றவியல் சட்டம் 427 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் சம்பந்தப்பட்ட நபர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கியிருப்பதாக ரவீந்தர் சிங் மேலும் குறிப்பிட்டார்.

Related News