Jul 28, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த 32 சீனப் பிரஜைகளுக்கு RM322,000 ஆயிரம் அபராதம்
தற்போதைய செய்திகள்

குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த 32 சீனப் பிரஜைகளுக்கு RM322,000 ஆயிரம் அபராதம்

Share:

குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 15(1)(c)-ன் கீழ் தொடரப்பட்ட வழக்கின் மறுவிசாரணைக்காக 32 சீனப் பிரஜைகள் அலோர் ஸ்டார் செக்‌ஷன் நீதிமன்றம் 3-இல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் இவ்வாண்டு மே 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் பாலிங் பெலாந்திக் குடிவரவு தடுப்பு முகாமில் அமைந்துள்ள சிறப்பு சட்டவிரோத வெளிநாட்டவர்களின்

நீதிமன்றத்தில் கெடா மாநில மலேசிய குடிநுழைவுத்துறைத் துறையின் வழக்குத் தொடரும் பிரிவினரால் குற்றஞ்சாட்டப்பட்ட 126 வெளிநாட்டு பிரஜைகளின் ஒரு பகுதியாகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் கூலிம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கெடா மாநில குடிநுழைவுத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின் போது குடிவரவு தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பெலாந்திக் குடிவரவு தடுப்பு முகாமில் நடைபெற்ற சிறப்பு (PATI) நீதிமன்ற விசாரணையின் போது, 32 சீனப் பிரஜைகள் தொடர்பான வழக்குகள் மொழிபெயர்ப்பாளர் சேவையைப் பெறும் நோக்கில் ஒத்திவைக்கப்பட்டு, இன்று அலோர் ஸ்டார் செக்‌ஷன் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி யாங் அரிஃப் மஸ்டி பின் அப்துல் ஹமீத் விசாரித்தார். அரசுத் தரப்பு வழக்கை TPPI பாராஹஃபிடா பிந்தி ஜகாரியா முன்னெடுத்ததுடன், குடிவரவு அதிகாரியான PI லினா பார்ஹானா பிந்தி அப்துல் ரஹ்மான் உதவியளித்தார்.

மேலும், இவ்வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட இருவருக்கு தலா RM11,000 அபராதமும், மேலும் முப்பது (30) பேருக்கு தலா RM10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்றம் விதித்த அனைத்து அபராதத் தொகைகளும் சம்பந்தப்பட்டவர்களால் முழுமையாக செலுத்தப்பட்டன.

இதன் மூலம் வசூலிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை RM322,000 லட்சமாகும்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்