May 22, 2026
Thisaigal NewsYouTube
அரிசி புதிய விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் - பிரதமர்
தற்போதைய செய்திகள்

அரிசி புதிய விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் - பிரதமர்

Share:

அரிசி விலை கட்டுப்பாடு, முக்கிய விவகாரமாக எழுந்துள்ளதால், அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் வாழ்க்கைச் செல​வீன மன்றத்தின் அமலாக்க, கண்காணி​ப்புக்கூட்டத்தில் அரிசி விலை தொடர்பாக ​தீர்க்கமாக முடிவு செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தை முன்கூட்டியே நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும் அரிசி விலை கட்டுப்பாடு உட்பட சில முக்கிய விவகாரங்க​ளை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் இக்கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்படவிருக்கும் புதிய அரிசி விலை, மிக குறைச்சலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும் நடப்பு விலையை விட குறைவாக கிடைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

Related News