Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பேச்சு திசைத்திருப்பட்டுள்ளது என்கிறார் முகைதீன்
தற்போதைய செய்திகள்

பேச்சு திசைத்திருப்பட்டுள்ளது என்கிறார் முகைதீன்

Share:

வரும் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு செலுத்தப்படும் ஒவ்வொரு வாக்கும் பாவச் செயலாகும் என்று தாம் கூறியதாக கூறப்படும் குற்றச்சாட்டு திரித்துக் கூறப்பட்டுள்ளது என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் இன்று விளக்கம் தந்துள்ளார்.

தாம் ஆற்றிய உரை வேண்டுமென்றே குறிப்பிட்ட தரப்பினரால் திரித்து கூறப்பட்டுள்ளது என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் விசாரணைக்கு ஆளாகியிருக்கும் முகைதீன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

Related News