Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தங்கப் பாலங்கள், தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

தங்கப் பாலங்கள், தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டன

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

இம்மாதம் முற்பகுதியில் கோலாலம்பூர், செந்தூல், கம்பூங் பாடாங் பாலாங் கில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கும் மாது ஒருவரின் பங்களா வீட்டில் நுழைந்து 21 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள தங்கப்பாலங்கள் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் கடந்த மார்ச் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் கொள்ளையடிக்கப்பட்ட தங்கப்பாலங்களும், தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்துக் அலாவுடின் அப்துல் மாஜிட் தெரிவித்துள்ளார்.

பிடிபட்ட கும்பல், சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் வர்த்தகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்களின் வீடுகளை இலக்காக கொண்டு கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்துக் அலாவுடின் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்