Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தாயும் மகனும் பெட்ரோல் ஊற்றி தாக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

தாயும் மகனும் பெட்ரோல் ஊற்றி தாக்கப்பட்டனர்

Share:

செராஸ், மார்ச் 13 -

செராஸ், கம்பூங் செராஸ் பாரு, வில் உள்ள விளையாட்டு பூங்காவில் கடந்த சனிக்கிழமை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதில் ஒரு வெளிநாட்டு பெண்மனி முகத்திலும் உடலிலும் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகிய வேளையில் அவரின் மகன் பலத்த காயமின்றி உயிர்தப்பினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1:34 மணியளவில் ரோஹிங்யா வை சேர்ந்த அப்பெண்ணின் கணவரிடமிருந்து இதுக்குறித்து புகார் ஒன்று கிடைக்கப்பெற்றதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி சாம் ஹாலிம் ஜாமாலுடின் கூறினார்.

பாதிக்கப்பட்ட 32 வயதுடைய அப்பெண் தனது இரண்டு வயது மகனை அழைத்துக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் விளையாட்டு பூங்காவிற்கு சென்றபோது இச்சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்ததாக சாம் ஹாலிம் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அப்பெண் குடிப்போதையிலிருந்த 26 மற்றும் 35 வயதுடைய ஒரே நாட்டைச் சேர்ந்த இரு ஆண்களை கண்டதாகவும் சந்தேகிக்கும் நபர்களில் ஒருவர் போத்தலில் பெட்ரோல் வாங்கி வருவதற்கு உத்தரவிட்டதாகவும் அறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் 30 சதவீதம் அப்பெண்ணின் முகம் மற்றும் உடல் தீயில் பாதிப்படைந்திருப்பதாக சாம் ஹாலிம் ஓர் அறிக்கையில் இன்று தெளிவுப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்