Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மலேசியர்களுக்கான இலவச விசா சலுகையை சீனா நீடித்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியர்களுக்கான இலவச விசா சலுகையை சீனா நீடித்துள்ளது

கோலாலம்பூர், நவ.23-


சீனாவிற்கு செல்வதற்கு மலேசியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் வழங்கி வந்த இலவச விசா சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச விசா சலுகையை வரும் நவம்பர் 30 ஆம் தேதியிலிருந்து சீனா நீடித்துள்ளது. அதேவேளையில் இந்த இலவச விசா சலுகையைப் பயன்படுத்தி, சீனாவில் தங்கியிருப்பதற்கு தற்போது அனுமதிக்கப்பட்ட 15 நாள் இலவச விசா சலுகையை சீனா, 30 நாட்களாக நீடித்துள்ளது என்று மலேசியாவிற்கான சீனத்தூதகரம் இன்று வெளியிட்டுள்ள ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த 30 நாள் இலவச விசா சலுகை வரும் நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவுறுவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →