Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

Share:

சபா மாநிலம் துவாரான் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் உள்ளூர் சந்தையில் விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த 11,450 கிலோ எடையுள்ள பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பொதிகளை கடற்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கெத்தும் தூளின் சந்தை மதிப்பு 11 லட்சத்து 45 ஆயிரம் ரிங்கிட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாவில் கெத்தும் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பறிமுதல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை காலை சுமார் 6 மணியளவில் சபா கடற்படை போலீசாரும் துவாரான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து நடத்திய சோதனையில் இந்தப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக 23 முதல் 46 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் 28 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என சபா படைப் பிரிவு கடற்படை போலீஸ் தளபதி உதவி ஆணையர் அஹ்மத் அம்ரி அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இச்சோதனையின் போது வளாகம் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியையும் போலீசார் பரிசோதித்ததாகவும், அப்போது கெத்தும் தூள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கு 1952-ஆம் ஆண்டு நச்சுப் பொருட்கள் சட்டத்தின் 30(3)-ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மற்ற கும்பல் உறுப்பினர்களை அடையாளம் காணும் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி