Mar 16, 2026
Thisaigal NewsYouTube
ஆடம்பர வாழ்க்கையை அணுக்கமாக கண்காணிக்கவும்
தற்போதைய செய்திகள்

ஆடம்பர வாழ்க்கையை அணுக்கமாக கண்காணிக்கவும்

Share:

அனைத்து மாவட்ட போலீஸ் தலைவர்களும், தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் யாரேனும் ஆடம்பர வாழ்க்கையில் திளைத்துள்ளார்களா என்பது குறித்து அணுக்கமாக கண்காணித்து வர வேண்டும் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கேட்டுக்கொண்டுள்ளார்.

போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தங்களின் வருமானத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் மிக ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்பதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கண்டறியுமானால் அந்த போலீஸ்காரர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படாமல் போனதற்கு மாவட்ட போலீஸ் தலைவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்று ஐஜிபி நினைவுறுத்தினார்.

தங்கள் கீழ் பணியாற்றுகின்ற அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களின் தவறான நடத்தையை கண்காணிக்க முடியாத மாவட்ட போலீஸ் தலைவர்கள் பதவி விலக வேண்டும். அவர்கள் தொடர்ந்து அப்பதவிகளில் அலங்கரிப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News