Jul 27, 2026
Thisaigal NewsYouTube
KK சூப்பர்மார்ட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியநபர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்
தற்போதைய செய்திகள்

KK சூப்பர்மார்ட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியநபர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 29-

கடந்த செவ்வாய் கிழமை பீடோர்- ரில் KK சூப்பர்மாட் வர்த்தகத் தளத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஷ்ரின் ஷா கேட்டுக்கொண்டார்.

இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இனப்பதற்றம் அதிகரிக்கும் என்று சுல்தான் நஷ்ரின் ஷா தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

KK சூப்பர்மார்ட் வர்த்தகத் தளத்தில் அல்லாஹ் என்ற சொல்லை தாங்கிய காலுறைகளைத் தவறுதாக விற்பனை செய்ததன் விளைவாக சங்கிலித் தொடர்பு விற்பனை நிறுவனமான அந்த வர்த்தகத் தளம், முஸ்லிம்களின் கோபத்திற்கு இலக்கானது.

இதனால் அந்த வர்த்தகத் தளத்தை முஸ்லிம்கள் புறக்கணிக்குமாறு கடந்த மார்ச் 13 ஆம் தேதி அம்னோ இளைஞர் பிரிவு விடுத்துள்ள கோரிக்கையைத் தொடர்ந்து இந்த பெட்ரோல் குண்டு வீச்சும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் உண்மையிலேயே அச்சத்தை ஏற்படுத்தம் வகையில் உள்ளது என்று சுல்தான் நஷ்ரின் ஷா குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற செயல்கள் தொடர்வதை தடுக்க KK சூப்பர்மாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

குறிப்பாக, இனப் பதற்றம் பரவுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுல்தான் நஷ்ரின் ஷா வலியுறுத்தியிருப்பதாக பேரா அரண்மனை செய்தித் தொடர்பாளர் சாஹிடி சய்னுடின் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்