Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சொகுசு கார்களை பயன்படுத்தி வெளிநாட்டவர்களை ஈர்க்கும் நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

சொகுசு கார்களை பயன்படுத்தி வெளிநாட்டவர்களை ஈர்க்கும் நபர்கள் கைது

Share:

கோலாலம்பூர், மே 08-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சொகுசு கார்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக வெளிநாட்டு பிரஜைகளை ஈர்க்கும் சில வாகன ஓட்டுநர்களின் செயல்பாடு அம்பலமானது.

KLIA 1, KLIA 2 ஆகிய இரண்டு விமான நிலையங்களிலும் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட Op Khas Ulat, e-Hailing திடீர் சோதனையின் போது 10 நபர்களை சாலை போக்குவரத்து துறை கைது செய்துள்ளது.

இச்சோதனையில் 20க்கும் 60க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன் 10 விதமான சொகுசு கார்களும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக சாலை போக்குவரத்து துறையின் துணை இயக்குநர் ஏடி ஃபெட்லி ரம்லி தெரிவித்தார்.

மலேசியாவிற்கு முதன்முறையாக வருகைப் புரியும் அந்நிய சுற்றுலாப்பயணிகளை மலிவான விலையில் அழைத்து செல்வதாக உறுதியளித்து, பிறகு காரில் அப்பிரஜைகள் ஏறியப்பின் பல்வேறு காரணங்களை கூறி பயணிக்கும் விலையை அதிகரிப்பதாக ஏடி ஃபெட்லி குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இன்று அதிகாலை வரையில் மேற்கொண்ட Op Khas e-Hailing சோதனையின் போது மொத்தம் 312 பேர் உட்பட 2,168 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்