Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு இடைத் தேர்தல் வெற்றி ஒரு தொடக்கமாக அமையலாம்
தற்போதைய செய்திகள்

கோலகுபு பாரு இடைத் தேர்தல் வெற்றி ஒரு தொடக்கமாக அமையலாம்

Share:

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தரில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறுமானால், அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றுவதற்கு ஒரு தொடக்கமாக அமையலாம் என்று அதன் சிலாங்கூர் மாநில தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிப் பெற்றால் அது சிலாங்கூர் மாநில அரசை மாற்றி அமைத்து விடாது. ஆனால், பக்காத்தான் ஹராப்பானின் சிலாங்கூர் மாநில அரசை வீழ்த்தி, அந்த மாநிலத்தை கைப்பற்றுவதற்கு நெருங்கி விட்டோம் என்பதற்கு ஒரு தொடக்கமாக மற்றும் சமிக்ஞையாக அமையும் என்று அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிடும் கைருல் அஸ்ஹரி சௌத்யை ஆதரித்து, அக்கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கையை இன்று கோலகுபு பாருவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உரையாற்றுகையில் முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசாரான அஸ்மின் அலி இதனை தெரிவித்தார்.

தவிர கோலகுபு பாருவில் பெரிக்காத்தான் நேஷனலின் வெற்றியானது, சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்