Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சார்டின் திருடிய குற்றத்திற்காக ஒரு மாத சிறை
தற்போதைய செய்திகள்

சார்டின் திருடிய குற்றத்திற்காக ஒரு மாத சிறை

Share:

பத்து பஹாட், ஏப்ரல் 22-

கடை ஒன்றில் சார்டின், தே தூள் மற்றும் திண்பன்டங்களை திருடிய குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு ஜொகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு மாத சிறைத்தண்டனை விதித்தது.

மனைவியை இழந்தவரான 64 வயது ஜமாலுதீன் யூசோப் என்ற முதியவர் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி பிற்பகல் 1.15 மணியளவில் ஜொகூர், பாரிட் ராஜா என்ற இடத்திலுள்ள பல்பொருள் விற்பனை கடையில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

10 சார்டின், 2 Nescafe பாட்டில்கள் மற்றும் திண்பன்டங்களை திருடியதாக அந்த பெரியவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 380 பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த முதியவரின் இச்செயலினால் அந்த கடைக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பாராஹ் வாஹிதா நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்