மலேசியாவின் சில பகுதிகளில் கடும் வெப்ப அலை நிலவுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
குறிப்பாக பெர்லிஸ் மாநிலம் முழுவதும் மற்றும் கெடா, பேராக் மாநிலங்களின் சில பகுதிகளிலும் வெப்ப அலை தாக்கம் அதிகரித்துள்ளது.
கெடா மாநிலத்தில் உள்ள கோத்தா ஸ்டார், பாலிங், சிக், போக்கோக் சேனா மற்றும் பெண்டாங் மாவட்டங்களில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது.
அதேவேளையில், பேராக் மாநிலத்தின் உலு பேராக்மாவட்டமும் வெப்ப அலை பாதிப்பில் உள்ளதாக மெட்மலேசியா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தீபகற்ப மலேசியாவில் 14 பகுதிகளுக்கு படிநிலை 1 எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை காரணமாக மக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், போதுமான தண்ணீர் குடிக்கவும் மெட்மலேசியா அறிவுறுத்தியுள்ளது.








