Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சோதனையில் மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

சோதனையில் மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், மே 06-

போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறையுடன் மத்திய போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை ஒன்றிணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையின் போது மொத்தம் 619 சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இச்சோதனையில் மொத்தம் 171 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 63 கார்கள் சட்டவிரோத குற்றங்களுக்காக கைப்பற்றப்பட்டன. மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 23க்கும் 53க்கும் இடைப்பட்ட வயதுடைய 13 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

வாகன பதிவு எண்களை தவறாக பயன்படுத்தியதற்காக 19 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் மற்றும் போதைப்பொருள் உட்கொண்டதற்காக 19 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 10 நபர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் மேல் விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சாலையை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இதுப்போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தவிர்க்கவும் இச்சோதனை தீவிரப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்