May 22, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்

Share:

பெட்டாலிங் ஜெயா, டாமான்சாரா - பூச்சோங் நெடுஞ்சாலையின் 13.6 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் விபத்தில் சிக்கி மூன்று நாட்களுக்கு அறுவை சிகிச்சை பெற்று வந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று இரவு 10.40 மணியளவில் யூனிவர்சிட்டி மலாயா மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட அந்நபர் பரிதாபமாக உயிரிழந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.

பெனெல்லி ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த 50 வயது அந்நபர் பண்டார் ஶ்ரீ டாமான்சாரா -விலிருந்து SS2 -வை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியதாக ஷாருல்நிஜாம் ஜாபர் கூறினார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களுக்கு ஆளாகி அந்நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் மேலும் தகவல் வெளியிட்டார்.

Related News