Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கைகலப்பு, 7 ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

கைகலப்பு, 7 ஆடவர் கைது

Share:

பந்திங் நகரில் ஓர் உணவகத்தில் நேற்று முன் தினம் நிகழ்ந்த கைகலப்பில் 7 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்த இந்த அடிதடி சண்டையில் 19க்கும் 47க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 7 ஆடவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் ரிதுவான் முகமட் நோர் தெரிவித்தார்.
உணவகத்தில் தங்களுடன் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் சக ஆடவர் தொல்லைக் கொடுத்ததை தொடர்ந்து வாய் சண்டை தகறாராக மாறி கைகலப்பில் முடிந்தது என்று அகமட் ரிதுவான் குறிப்பிட்டார்.

நேற்று மாலை 4.30 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் போலீசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அந்த எழுவரும் கைது செய்யப்பட்டதாக ரிதுவான் விளக்கினார்.

Related News