ஜானா விபாவா நிதித் திட்டத்தில் லஞ்ச ஊழல் புரிந்ததாக 4 குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசினை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து இருப்பது மூலம், அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் யாவும் அரசியல் நோக்கமுடையது என்பது தெளிவாகியுள்ளது என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடீன் ஹசான் கூறுகிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு முகைதீன் யாசின் பிரதமராக இருந்த காலகட்டத்தில் 23 கோடியே 25 வெள்ளி சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்த பெரிக்காத்தான் நேஷனல் தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் யாவும் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கொண்டுள்ளது என்பது அவரின் விடுதலை மூலம் தெளிவாகியுள்ளது என்று தக்கியுடின் ஹசான் வர்ணித்துள்ளார்.
தங்களின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு குற்றம் இழைக்காத நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு அரசாங்க அமலாக்க ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும் என்று தக்கியுடின் ஹசான் கேட்டுக்கொண்டார்.

Related News

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு

ஆசிரியை மரணம்: ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கோரிக்கை வலுக்கிறது

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது


