May 22, 2026
Thisaigal NewsYouTube
உப்ஸி முன்னள் துணை வேந்தர் விடுதலை
தற்போதைய செய்திகள்

உப்ஸி முன்னள் துணை வேந்தர் விடுதலை

Share:

UPSI எனப்படும் தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இணை வேந்தர் சாகாரியா காசாவிற்கு எதிரான 18 மாத சிறைத் தண்டனையை புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

அதேவேளையில் அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆயிரம் வெள்ளி அபராதத் தொகையையும் அது தள்ளுபடி செய்தது.

அந்த கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்ற முறையில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக சாகாரியா காசாவிற்கு ஈப்போ உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி Hadhariah Syed Ismail தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Related News