May 21, 2026
Thisaigal NewsYouTube
மித்ரா சிறப்புப் பணிக்குழுத் தலைவராக பிரபாகரன் நியமனம்
தற்போதைய செய்திகள்

மித்ரா சிறப்புப் பணிக்குழுத் தலைவராக பிரபாகரன் நியமனம்

Share:

இந்தியர்களின் சமூகவியல், உருமாற்றுப் பிரிவான மித்ராவின் சிறப்பு பணிக்குழுவின் புதிய தலைவராக Batu எம்.பி. P. பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மித்ராவின் சிறப்பு பணிக்குழுத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த சுங்கை பூலோ எம்.பி. டத்தோ ஆர். ரமணன், அண்மையில் தொழில் முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பொறுப்புக்கு பிரபாகரனை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய சமுதாயத்தின் கண்ணியம் மற்றும் சமூகவியல், பொருளாதார நிலையை உயர்த்துவதில் மித்ரா தனது நம்கத்தன்மையையும், கடப்பாட்டையும் தொடர்ந்து நிறைவேற்றுவதை இந்த நியமனம் உறுதி செய்யும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மித்ரா சிறப்புப் பணிக்குழுவின் தலைவராக பிரபாகரனின் நியமனம், உடனடியாக அமலுக்கு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related News