சிலாங்கூர் மாநில சட்டமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படுகிறது. 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சிலாங்கூர் சட்டமன்றத்தை கலைப்பதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராப்புடின் இட்ரீஸ் ஷா அனுமதி வழங்கிய வேளையில், சுல்தானின் அந்தரங்க செயலாளர் டத்தோ முகமட் மினிர் பானி அறிவிப்புக்கு இணங்க இந்த கலைப்பு நடைபெறுகிறது.
தற்போது, சிலாங்கூர் மாநிலம் மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது. இதில் 40 தொகுதிகளை பக்காத்தான் ஹராப்பான் கொண்டுள்ளது. அதே வேளையில், பரிசான் நேஷ்னல் 5 தொகுதிகளையும், பெர்சத்து கட்சி 4 தொகுதிகளையும், பார்த்தி பங்சா மலேசியா 2 தொகுதிகளையும், பாஸ், பெஜுவாங் மற்றும் வரிசான் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியையும் மற்றும் ஒரு சுயேச்சை பிரதிநிதியையும் சிலாங்கூர் மாநிலம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 6 மாதங்களுக்கு மேலாக, மாநில சட்ட மன்றக் கூட்டத்தில் அதன் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளாததால், பாதாங் காலி சட்ட மன்றம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








